உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2 ஆயிரம் கோடி வசூலிக்குமா துரந்தர் 2 : மாதவன் செம ஹேப்பி

2 ஆயிரம் கோடி வசூலிக்குமா துரந்தர் 2 : மாதவன் செம ஹேப்பி

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர்சிங், மாதவன், அர்ஜூன் ராம்பால் நடித்த துரந்தர் தி ரிவெஞ்ச் படத்தின் வெற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. முதல்நாள் மட்டும் இந்த படம் 240 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால் டிக்கெட் புக்கிங் அதிகரித்துள்ளது. அடுத்த வாரத்தில் 1000 கோடியை படம் தொடும். ஒட்டு மொத்தமாக 2 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலிக்க வாய்ப்புள்ளது. இந்திய சினிமாவில் புது சாதனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்திலும் இந்தி படங்களின் வரிசையில் அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமான கேரக்டரில் உளவு அதிகாரியாக மாதவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் போனில், சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறதாம்.

இந்த படம் குறித்து அவர் கூறுகையில், 'எனக்கும் அந்த கேரக்டரை யாரை மனதில் வைத்து உருவாக்கினார்களோ, அவருக்கும் எந்த சம்பந்தம் இருக்காது. ஆனாலும், என்னை மாற்றினார்கள். அந்த மேக்கப் போடவே 4 மணி நேரம் ஆகும். இப்போது பாராட்டுகளை கேட்கும்போது அந்த கஷ்டம் பறந்துவிட்டது. இப்படிப்பட்ட தேசபக்தி படத்தில், தேசத்தின் மீது அக்கறை, பாசம் கொண்ட ஒருவர் கேரக்டரில் நடித்தது எனக்கு கடவுள் கொடுத்த வாய்ப்பாகவே பார்க்கிறேன். தமிழகத்தில் இருந்து கூட ஏகப்பட்ட போன். உன் சீனுக்கு ஏகப்பட்ட கைதட்டல், விசல் என்கிறார்கள். அதை கேட்கவே சந்தோசமாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !