இனி அப்படி சொல்லாதீங்க : கமல்ஹாசன் வேண்டுகோள்
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் கமல்ஹாசன் இன்று ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‛‛பல ஆண்டு விவாதங்களுக்குப் பின் சென்சார் என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். அந்த அமைப்பின் பெயர் சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்ட்டிபிகேசன் தான். சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல்.
தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான் என கமல் கூறியுள்ளார்.
இப்போது மீடியாக்களில், பேச்சு வழக்கில் சினிமா சென்சார், சென்சார் போர்டு என்பது அதிகம் பயன்படுத்தப்படுவதாலும், அது தவறானது. சினிமாவை தணிக்கை செய்வது அந்த அமைப்பு இல்லை. அது சான்றிதழ் வழங்கும் அமைப்பு என்று கமல்ஹாசன் தெளிவுபடுத்தி உள்ளார்.