உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தள்ளிப்போகிறதா பெத்தி...

மீண்டும் தள்ளிப்போகிறதா பெத்தி...

உப்பன்னா பட இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் தெலுங்கு படம் 'பெத்தி'. இதில் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

முதலில் இப்படம் இவ்வருட மார்ச் 27ந் தேதியன்று திரைக்கு வருவதாக அறிவித்தனர். ஆனால், படப்பிடிப்பு நிலுவையில் இருந்ததால் ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்தனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த பணிகள் முடிய கொஞ்சம் கால தாமதம் ஏற்படுமாம். அதன் காரணமாக பெத்தி படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகலாம் என செய்தி வெளியாகி உள்ளது. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

ஒருவேளை பெத்தி தள்ளிப்போனால் ஏப்ரல் 30ம் தேதியன்று தமிழில் தனுஷ் நடித்து திரைக்கு வரும் 'கர' படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் போட்டி இல்லாமல் கூடுதல் திரைகள் கிடைக்கும் என தமிழ் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !