மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா மோகன்!
ADDED : 11 hours ago
நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் முன்னனி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான 'மேட் இன் கொரியா' படத்தின் மூலம் முதல்முறையாக பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பிரியங்கா மோகன். அதன்படி, ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பில் 'சக்ரா' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் தான் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். இப்படம் நேரடியாக தியேட்டருக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.