உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுத்தமான தங்க ஜோடி : நடிகை சார்மி கமெண்ட்

சுத்தமான தங்க ஜோடி : நடிகை சார்மி கமெண்ட்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் சமூக வலைத்தளங்களில் நேற்று இரவு முதல் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை த்ரிஷாவின் பதிவு. தமிழக முதல்வர் விஜய்யுடன் நள்ளிரவு சரியாக 12.00 மணிக்கு அவர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தைப் பகிர்ந்த அந்தப் பதிவு தற்போது வரையிலும் டைம்லைன்களில் வந்து கொண்டிருக்கிறது.

த்ரிஷாவின் அந்தப் பதிவிற்கு 4 மில்லியனுக்கு மேற்பட்ட லைக்குகள், 3 லட்சத்தை நெருங்கும் கமெண்ட்டுகள் இதுவரை கிடைத்துள்ளன.

பல சினிமா பிரபலங்கள், கமெண்ட், லைக்குகள் என போட்டு வருகிறார்கள். விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஸ்லம்டாக்' படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான சார்மி அந்தப் பதிவுற்கு 'சுத்தமான தங்க ஜோடி' என்று கமெண்ட் பதிவு செய்துள்ளார். சார்மியின் இந்தக் கமெண்ட் என்ன அர்த்தத்தில் பதிவிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

த்ரிஷாவின் இந்தப் பதிவிற்கு விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் இருவேறு நிலைகளில் கமெண்ட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !