நான் ரிலேஷன் ஷிப்பில் இல்லை - ஸ்ருதிஹாசன்
ADDED : 19 minutes ago
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாக குறைந்து கொண்டு வருகிறார் ஸ்ருதிஹாசன்.
தற்போது ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில், நீங்கள் ரிலேஷன் ஷிப்பில் உள்ளீர்களா? என்கிற கேள்விக்கு 'இல்லை' என்றும், நடிப்பு துறையில் இல்லையென்றால் என்ன வேலை செய்ய விரும்புவீர்கள் என்கிற கேள்விக்கு 'குழந்தைகள் மனநல மருத்துவர்' என பதிலளித்துள்ளார். இந்த பதில்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.