'புஷ்பா 2'வில் நடித்த காட்சிகள் இல்லை! - திவி வத்யா
ADDED : 11 hours ago
நடிகை திவி வத்யா தெலுங்கில் 'மகரிஷி, டாக்கு மகாராஜா, காட்பாதர், ஏ1 எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 'புஷ்பா 2' படத்தில் நடித்துள்ளார் என புஷ்பா 2 படம் வெளியாகுவதற்கு முன்பு தகவல் வெளியானது.
தற்போது திவி வத்யா தெலுங்கில் பிரபலமான யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து கூறியதாவது, புஷ்பா 2 படத்தில் நான் 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தேன். என் கதாபாத்திரத்திற்காக 10 நாட்கள் டப்பிங் பணிகளையும் முடித்து தந்தேன். ஆனால், புஷ்பா 2 படம் திரைக்கு வந்த பிறகு போய் பார்த்தால் எனது காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. இது எனக்கு மிகுந்த வலியையும், ஏமாற்றத்தையும் தந்தது. என தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.