தயாரிப்பு நிறுவனம் தொடங்கினாரா அஜித்?
ADDED : 2 days ago
நடிகர் அஜித்குமார் சினிமா மற்றும் ரேஸ் என இரண்டிலும் மாறி மாறி கவனம் செலுத்துகிறார். கடந்த சில மாதங்களாக சினிமாவை கடந்து ரேசிங்கில் மட்டுமே பிஸியாக உள்ளார். அஜித் குமாரின் ரேசிங் பயணத்தை ஆவண படமாக இயக்குனர் விஜய் இயக்குகிறார் என்கிற அறிவிப்பை ஏற்கனவே டிரைலர் வீடியோ உடன் அறிவித்தனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த ஆவண படத்தை 2026ம் ஆண்டில் மே 1ம் தேதியன்று அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை அஜித்குமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார் என கூறப்படுகிறது. இதற்காக அவரின் பெயரில் தயாரிப்பாளர் நிறுவன சங்கத்தில் தயாரிப்பு நிறுவனத்தை பதிவு செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.