உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத 'உஸ்தாத் பகத் சிங்'

எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத 'உஸ்தாத் பகத் சிங்'


ஹரிஷ் சங்கர் இயக்கத்தில், பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'உஸ்தாத் பகத் சிங்'. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளது.

'கப்பார் சிங்' படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கூட்டணியாக அமைந்த பவன், ஹரிஷ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்த படமாக இப்படம் இருந்தது. ஆனாலும், அது மீண்டும் வெற்றிகரகமாக அமையவில்லை.

பவன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'ஹரிஹர வீரமல்லு' படத்தை விடவும் இப்படம் மோசமான தோல்வியைத் தழுவும் என்கிறார்கள். 'துரந்தர் 2' படத்துடன் இப்படத்தை வெளியிட்டது தவறு என்பதுதான் டோலிவுட்டில் கருத்தாக உள்ளது.

தீவிர அரசியலில் இறங்கி ஆந்திர துணை முதல்வராக பதவி வகித்தாலும் பவன் கல்யாண் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், அவருக்கு பிரம்மாண்டமான வெற்றி கிடைக்காமல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

முருகன்
2026-03-23 16:39:12

அடுத்த மாநிலத்தில் அரசியல் செய்ய நினைத்தால் இது தான் நடக்கும்