உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 4 நாட்களில் 28.3 கோடி வசூலித்த யூத்

4 நாட்களில் 28.3 கோடி வசூலித்த யூத்

நடிகர் கருணாஸின் மகன் கென் இயக்கி, நடித்துள்ள 'யூத்' கடந்த வாரம் திரைக்கு வந்தது. அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்தனர். பர்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். பள்ளி பருவத்து நிகழ்வுகளை மையமாக வைத்து படம் வெளியானது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் திரையரங்குகளில் படம் வெற்றி நடைபோட்டு வருகிறது. இப்படம் முதல் நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 28.3 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் இந்தாண்டில் வெளியான படங்களில் வெளியீட்டில் யூத் படமும் வெற்றி பட லிஸ்ட்டில் இணைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !