ஐந்து மொழிகளில் வரும் டொவினோ படம்
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டொவினோ தாமஸ் நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி 'படம் ஏப்ரல் 10ல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
சமீபத்தில் வெளியான இந்த பட டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை காட்சிகளால் நிரம்பியுள்ளது. இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான 'காட்டு செம்பகம்' பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
'பள்ளிச்சட்டம்பி' டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாகும். இதற்கு முன்பு இவர்கள் 'குயின்', 'ஜன கண மன' மற்றும் 'மலையாளி பிரம் இந்தியா' ஆகியவற்றில் இணைந்து இருக்கிறார்கள். தமிழில் துல்கர்சல்மான், பிருத்விராஜ் படங்களுக்கு மார்க்கெட், ரசிகர்கள் இருக்கிறார்கள். அதை பிடிக்க வேண்டும் என டொவினோ விரும்புகிறார். அதனால் இந்த படத்தை தமிழில் வெளியிடுகிறார் என தகவல்.