'கர' படத்தில் ரவிக்குமார், சுராஜ், கருணாஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு
'போர் தொழில்' இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'கர'. இப்படத்தில் தனுசுடன் மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷின் கரசாமி கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், நேற்று மமிதா பைஜூவின் போஸ்டர் வெளியானது. அதில் அவர் செல்லி என்ற வேடத்தில் நடிப்பதாக தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரின் போஸ்டரை வெளியிட்டு அவர் கந்தசாமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், சுராஜ் வெஞ்சரமூடுவின் போஸ்டரை வெளியிட்டு, அவர் பரதன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோல், கருணாஸ், காசி மாயன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர்களை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த கர படம் ஏப்ரல் 30ல் திரைக்கு வருகிறது.