உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2

ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2

மலையாளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமான திரிஷ்யம் 3 தற்போது உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் 2ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் மற்றும் சில காரணங்களால் தற்போது மே 21க்கு இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2021ல் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்த சமயத்தில் நேரடியாகவே ஒடிடி தளத்தில் வெளியானது. ஆனாலும் தியேட்டருக்கு இணையான வரவேற்பையும், வெற்றியையும் இந்த படம் பெற்றது.

தற்போது திரிஷ்யம் 3 ரிலீஸ் தள்ளிப்போயுள்ள நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இரண்டாம் பாகத்தில் என்ன நடந்தது என்பதை நினைவூட்டும் விதமாகவும் தற்போது வரும் ஏப்ரல் 10ம் தேதி இரண்டாம் பாகத்தை நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. திரிஷ்யம்-2வை தியேட்டரில் பார்த்து ரசிக்க முடியாமல் மிஸ் பண்ணிய ரசிகர்களுக்கு இது ஒரு போனஸ் வாய்ப்பு என்று சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !