ரஜினியின் 'தர்மன்' பட வெளியீட்டு திட்டத்தில் மாற்றமா?
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 'ஜெயிலர்-2'. இப்படம் வருகிற 15ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை அடுத்து 'ஓ மை கடவுளே, டிராகன்' படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.
இந்த படம் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த ரிலீஸ் தேதியில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட நாட்களாகத் தாமதமாகி வரும் 'இந்தியன்-3' படத்தை பொங்கல் பண்டிகையின்போது வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் 'தர்மன்' படத்தை 2027 கோடை விடுமுறையில் வெளியிட யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தர்மன் படத்தின் வெளியீடு குறித்து கமல்ஹாசன் ஏற்கனவே ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.