உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம்

பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம்

தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தனது ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனத்தின் மூலம் பல முக்கியமான படங்களை தயாரித்தவர். தமிழில் இந்தியன், கில்லி, தூள், பாய்ஸ், சிவகாசி, குஷி, ஆரம்பம், வேதாளம் போன்ற படங்களை தயாரித்துள்ளார். தற்போது ஏ.எம். ரத்னம் தமிழில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தயாரித்த பல படங்களின் அனுபவங்களை குறித்து பகிர்ந்து கொண்டார்.

ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், தமன், நகுல், மணிகண்டன், விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் 2003ல் வெளியான படம் ‛பாய்ஸ்'. ஷங்கரா இப்படி ஒரு படத்தை இயக்கினார் என அப்போது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதேசமயம் ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

இந்த படம் குறித்து ரத்னம் கூறுகையில், பாய்ஸ் படம் வெளியான காலக்கட்டத்தில் தமிழகத்தில் தான் ஓடவில்லை. தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெற்றி பெற்றது. தமிழில் தியேட்டரில் பெரிதளவில் யாரும் பார்க்கவில்லை. இப்போது நினைத்தால் கூட என்னால் மற்றும் ஷங்கரால் கூட பாய்ஸ் மாதிரி ஒரு படத்தை உருவாக்க முடியாது. இதனால் விரைவில் பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !