உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா?

முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா?

சோமீதரன் என்பவர் இயக்கத்தில் உருவான நீளிரா என்ற இலங்கை படம் ஏப்ரல் 3ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சென்னையில் நடந்த இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்டில் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சசி, லோகேஷ் கனகராஜ், பொன்ராம், லிங்குசாமி, பாகுபலி ராணா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்கு இவர்கள் ஏன் வந்து பேசுகிறார்கள் என்று விசாரித்தால் படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் வெளியிடுகிறது.

இயக்குனர்கள் மணிரத்னம், பாலா, லிங்குசாமி, சசி, முருகதாஸ் உட்பட பல முன்னணி இயக்குனர்கள் ரெய்னா என்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள் என்பதால் நீளிரா படத்தை வாழ்த்த வந்துள்ளனர். இந்த படம் இலங்கை பின்னணியில் நடக்கிறது. ஒருநாள் இரவில் இலங்கையில் ஒரு வீட்டில் திருமணத்துக்கு ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைக்கிறது. வீட்டில் இருந்தது யார்? சண்டை நடந்ததா? திருமணம் நடந்ததா என்ற பின்னணியில் கதை நகர்கிறது. பாலுமகேந்திரா மாணவரான சோமீதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குனர் நண்பர்களின் வாட்ஸ் குழு தலைப்பான ரெய்னாவுக்கும், பாலுமகேந்திராவுக்கும் தொடர்பு உள்ளது. அவர் இலங்கையில் சின்ன வயதில் ஒரு படப்பிடிப்பு பார்த்துள்ளார். அப்போது மழைக்காட்சி எடுக்கப்பட, இயக்குனர் ரெய்னா என்ற சொன்னவுடன் மழை பெய்து இருக்கிறது. அதை பார்த்து வியந்தவர், நாம் இந்த வேலைக்கு தான் செல்ல வேண்டும் என முடிவெடுத்து சினிமா துறைக்கு வந்து இருக்கிறார். பாலுமகேந்திரா நினைவாக ரெய்னா என்ற தலைப்பு வைத்து இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !