நூறு சாமி படத்தின் டீசர் நாளை(ஏப்., 4) வெளியாகிறது
ADDED : 3 minutes ago
பிச்சைக்காரன் படத்தை அடுத்து சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் நூறு சாமி. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் சுவாசிகா, லிஜோமோல், கருணாஸ், காவியா அணில் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த நூறு சாமி படத்தின் முதல் பாடல், பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், மே ஒன்றாம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் படத்தின் டீசர் நாளை(ஏப்., 4) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிச்சைக்காரன் படம் தமிழை போலவே தெலுங்கிலும் பெரிய அளவில் வசூலித்த நிலையில், இந்த நூறு சாமி படத்தையும் தெலுங்கில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.