நயன்தாரா தலைமையில் நடந்த 'எல்ஐகே' நிகழ்ச்சி
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி மற்றும் பலர் நடித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் முன் வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.
திங்கள் கிழமை நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சி திடீர் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டு மறுநாள் செவ்வாய் கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சி முழுவதும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை நயன்தாரா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அந்த கல்லூரிக்குச் சென்று மைதானத்தைப் பார்வையிட்டு நிகழ்ச்சி மேடை, ஒளி, ஒலி அமைப்பு உள்ளிட்டவை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் நிகழ்ச்சி ஆரம்பித்த பின் 'பேக் ஸ்டேஜ்'-ல் இருந்து கொண்டும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கணவர் விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொல்வதற்காக மேடை ஏறினாலும், அவர் எதுவுமே பேசவில்லை. தான் நடிக்கும் படங்களின் விழாக்களுக்குச் செல்லாத நயன்தாரா தான் தயாரிக்கும், கணவர் இயக்கும் படத்திற்காக அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.