உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானே இறங்குறேன்... : அஜித் எடுத்த முடிவு

நானே இறங்குறேன்... : அஜித் எடுத்த முடிவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். அவர் நடித்த 'குட் பேட் அக்லி' படம் வெளிவந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ஆனாலும், அவரது அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அடுத்த படத்தையும் 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியான தகவல். ஆனால், படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்ற கேள்வி மட்டும் கடந்த சில மாதங்களாக இருந்து வந்தது.

'குட் பேட் அக்லி' படத்தைத் தயாரித்த தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், மற்றும் 'விஸ்வாசம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ், மற்றும் அஜித்தை எப்படியாவது தங்கள் நிறுவனத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று முயற்சித்த வேல்ஸ் பிலிம்ஸ் ஆகியவை போட்டியில் இருந்தன. இருந்தாலும் சம்பளம் உள்ளிட்ட சில விஷயங்களால் அவை நடக்கவில்லையாம்.

இதனிடையே, சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் படத்தைத் தயாரித்துக் கொள்ளலாம் என்று அஜித் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறதாம். முதற்கட்டமாக அஜித்தின் ரேஸ் பற்றிய ஆவணப்படம் அவரது தயாரிப்பில் தான் உருவாகி வருகிறது. விரைவில் சினிமா படம் பற்றிய அறிவிப்பும், அடுத்த மே மாதம் படப்பிடிப்பும் நடக்கும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

Amar
2026-04-10 09:58:07

When Vijay leave in film industry no opponent his market down no market value


krishnamurthy, chennai
2026-04-09 18:50:36

நல்ல வேலை. அரசியலில் இறங்குவது என்பதோ என நினைத்தேன்