ஹாய் படத்தின் கண்ணங்குழியா முதல் சிங்கிள் ஏப்ரல் 21ல் ரிலீஸ்!
ADDED : 146 days ago
விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின், சத்யராஜ், கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஹாய். ஒரு இளைஞன் தன்னைவிட வயதில் மூத்த பெண் மீது காதலில் விழும் கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. மே மாதம் திரைக்கு வர உள்ள இந்த ஹாய் படத்தில் கண்ணங்குழியா என்ற பாடல் வருகிற ஏப்ரல் 21ம் தேதி வெளியாக இருப்பதாக இப்படத்தை தயாரித்திருக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் போஸ்டருடன் அறிவித்திருக்கிறது. இப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்துள்ளார்.