உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சகோதரர் மகன் அறிமுகமாகும் பட டீசரை வெளியிட்டு மகேஷ்பாபு வாழ்த்து

சகோதரர் மகன் அறிமுகமாகும் பட டீசரை வெளியிட்டு மகேஷ்பாபு வாழ்த்து

தெலுங்கில் ஆர்எக்ஸ் 100, மங்களபுரம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க வெற்றி படங்களை இயக்கியவர் அஜய் பூபதி. தற்போது இவர் சீனிவாச மங்காபுரம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் மகேஷ்பாபுவின் மறைந்த சகோதரர் ரமேஷ்பாபுவின் மகனான ஜெயகிருஷ்ணாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை ரவீணா டாண்டனின் மகள் ராஷா தடானி அறிமுகமாகிறார். கடந்த வருடம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை நடிகர் மகேஷ்பாபு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சீனிவாச மங்காபுரம் படத்தின் டீசரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. ரொம்பவே உத்தரவாதம் தரும் விதமாக இருக்கிறது. ஜெயகிருஷ்ணா இந்த அழகான சினிமா உலகத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அவரது ஒவ்வொரு அடியும் வளர்ச்சியை நோக்கி இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார் மகேஷ்பாபு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !