உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 'எங்க ஊரு மாப்பிள்ளை' படத்தை இயக்க மறுத்த ராமராஜன்

பிளாஷ்பேக்: 'எங்க ஊரு மாப்பிள்ளை' படத்தை இயக்க மறுத்த ராமராஜன்


ராமராஜனின் ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு துணையாக இருந்தவர்களில் தயாரிப்பாளார் துரையும் ஒருவர். பின்னாளில் ராமராஜன் பெரிய இடத்துக்கு வந்த பிறகு தன்னை சுற்றி இருந்தவர்களை தயாரிப்பாளராக்கினார். துரைக்கு ஒரு படம் கொடுக்க விரும்பினார். அந்த நேரத்தில் ஒரு எழுத்தாளர் 'எங்க ஊரு மாப்பிள்ளை' என்ற கதையை ராமராஜனுக்கு சொல்லி இருந்தார். அந்த கதை ராமராஜனுக்கு பிடித்திருந்தது. அவர் தயாரிப்பாளர் துரையை அழைத்து 'இந்த கதையை பண்ணுவோம் நானே டைரக்ட் பண்றேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' என்றார்.

ஆனால் ராமராஜன் நடிப்பில் பிசியாக இருந்ததால் படம் இயக்குவதை கைவிட்டு விட்டடார். என்றாலும் துரைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற 'எங்க ஊரு மாப்பிள்ளை'யில் நான் நடிக்கிறேன். ஆனால் இயக்க நேரமில்லை. அதனால் டி.பி.கஜேந்திரனை இயக்க சொல்லுங்கள்' என்று கூறிவிட்டார்.

கதையை கேட்ட டி.பி.கஜேந்திரன் இது எம்ஜிஆர் மாதிரியான ஹீரோக்கள் நடிக்க வேண்டிய கதை. இது எப்படி ராமராஜனுக்கு பொருந்தும் என்று கருதி அதை ராமாராஜனிடம் சொன்னார். 'அண்ணே ஒரு கோழை திடீர்னு வீரனாகுறதுதான் ஒன்லைன்'. அதை என்ன வேணாலும் செய்து எனக்கு ஏற்ற மாதிரி மாத்திக்குங்க, எனக்கு தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கையும், எழுத்தாளருக்கு கொடுத்த வாக்கையும் காப்பாத்தணும்' என்றார்.

அதன்பிறகு ராமராஜன், கவுதமி, ஆர்.பி.விஸ்வம், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வினு சக்ரவர்த்தி, ஹாஜா ஷெரீப், கல்லாப்பெட்டி சிங்காரம் உள்ளிட்ட பலர் நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்தார். படமும் ஓரளவிற்கான வரவேற்பை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !