உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...!

ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...!

வாரா வாரம் ஓடிடியில் புதுப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஹார்ட் பீட்
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற வெப் தொடர் ஹார்ட் பீட். இந்த தொடரின் இரண்டாவது சீசன் 'ஹார்ட் பீட் 2' தொடர் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

ஹேப்பி ராஜ்
அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீ கௌரி பிரியா மற்றும் நடிகர் அப்பாஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' ஹேப்பி ராஜ்'. உருவக் கேலியால் பாதிக்கப்பட்ட தந்தை, மகன் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள், அதைத் தாண்டி அவர்கள் எப்படி மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை ஆகும். இந்த திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

லெச்சிந்தி மகிளா லோகம் (Lechindi Mahila Lokam)
தெலுங்கு இயக்குநர்கள் அர்ஜுன் குன்னாலா & கார்த்திக் தேசாரி இயக்கத்தில் அனன்யா நாகல்லா, ஸ்ரீராம சந்திரா, லட்சுமி மஞ்சு, ஷ்ரத்தா தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லெச்சிந்தி மகிளா லோகம் (Lechindi Mahila Lokam)'. இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

பேண்ட் மேளம்(Band Melam)
தெலுங்கு இயக்குநர் சதீஷ் ஜவ்வாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பேண்ட் மேளம்(Band Melam)'. இதில் ஹர்ஷ் ரோஷன் மற்றும் ஸ்ரீதேவி அப்பலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் 24ம் தேதியான இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இப் விஷஸ் குட் கில் (If Wishes Could Kill)
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஐந்து நண்பர்கள், ஆசைகளை நிறைவேற்றித் தரும் ஒரு மர்மமான செயலியை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அந்த செயலி நிறைவேற்றும் ஆசைகளுக்குப் பிறகு, அவர்களுக்கு மரண எச்சரிக்கை மற்றும் கவுண்டவுன் தொடங்குகிறது. வகுப்புத் தோழர் ஒருவரின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து, அந்த நண்பர்கள் தங்கள் விதியை மாற்றவும், ஆபத்தான அந்தச் சங்கிலியை உடைக்கவும் போராடுகிறார்கள் என்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த தொடர் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

28 Years Later : The Bone Temple
ஆங்கில மொழியில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ப்ரதிச்சாயா
மலையாள இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில், நிவின் பாலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ப்ரதிச்சாயா'. பொலிட்டிக்கல் த்ரில்லர் படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் இன்று (ஏப்.24ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானது.

24
பாலிவுட் நடிகர் அனில் கபூர் நடிப்பில் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் சீரிஸ் '24'. இந்த படம் இன்று (ஏப்.24ம் தேதி) ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

அபெக்ஸ் (Apex)
ஹாலிவுட் இயக்குநர் எட்வர்ட் ஜான் டிரேக் இயக்கத்தில் புரூஸ் வில்லிஸ், நீல் மெக்டோனோ நடிப்பில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'அபெக்ஸ்(Apex)'. இந்த படம் இன்று (ஏப்.24ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !