உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பேட்ரியாட்' மலையாள சினிமாவின் கேம் சேஞ்சராக இருக்கும் ; மம்முட்டி நம்பிக்கை

'பேட்ரியாட்' மலையாள சினிமாவின் கேம் சேஞ்சராக இருக்கும் ; மம்முட்டி நம்பிக்கை


மலையாளத்தில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மல்டி ஸ்டாரர் படமாக மம்முட்டி, மோகன்லால், குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், நயன்தாரா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள 'பேட்ரியாட்' திரைப்படம் உருவாகியுள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இந்த படம் வரும் மே 1ம் தேதி வெளியாக இருக்கிறது. ராணுவ பின்னணிகள் அமைந்துள்ள படம் இது என்பதாலும் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் இது வெளியாவதாக போஸ்டர்களுடன் கூடிய அறிவிப்புகள் முன்பு வெளியானதாலும் இது ஒரு பான் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது என்று தான் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் மம்முட்டி பேட்ரியாட் படம் குறித்து கூறும்போது, “இது பான் இந்தியா படம் எல்லாம் இல்லை.. முழுக்க முழுக்க மலையாளிகளுக்கான படம். காரணம் இந்தக் கதையின் இதயப்பகுதியே கேரளாவை சுற்றித்தான் இருக்கிறது. அதேசமயம் கேரளாவை தாண்டிய ரசிகர்களையும் இது கவரும். சமீப காலமாக மாறி வருகின்ற, ரசனையில் மேம்பட்டு வருகின்ற ரசிகர்களுக்கு ஒரு நல்ல சினிமா அனுபவத்தை கொடுக்கும் படமாக இருக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் தான் இதை உருவாக்கியுள்ளோம். அந்த வகையில் மலையாள சினிமாவின் கேம் சேஞ்சராக இந்த படம் இருக்கும். இதை தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்கள் உருவாக இது வழி வகுத்துக் கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !