‛கரா'-வால் ‛கர'-க்கு வந்த சிக்கல்
ADDED : 1 minutes ago
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛கர'. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தபடம் இந்தவாரம் ஏப்., 30ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது படத்திற்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்பே ‛கரா'(Kara) என்ற பெயரில் தங்களது படத்திற்கு தலைப்பை பதிவு செய்துள்ளதாகவும், இதுபற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அதனால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க கோரி வேங்கை அய்யனார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளையே உடன் விசாரணைக்கு வருகிறது.