தாமதமாகும் ப்ரீத்தி முகுந்தனின் பாலிவுட் படம்
அக்மார்க் தமிழ் நடிகை ப்ரீத்தி முகுந்தன் 2024ல் வெளியான 'ஓம் பீம் புஷ்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். கவினுடன் இணைந்து நடித்த 'ஸ்டார்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சாய் அபியங்கரின் வைரல் பாடலான ஆசை கூட டீஜே அருணாசலத்தின் முட்டு முட்டு 2 ஆகிய இசை ஆல்பங்களிலும் இவர் நடித்துள்ளார். விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' திரைப்படத்தில் நடித்து மேலும் புகழ்பெற்றார்.
தற்போது ஹரிஷ் கல்யாணுடன் 'தாஷமக்கான், அர்ஜுனுடன் 'ப்ளாஸ்ட்' படங்களில் நடித்து முடித்திருக்கும் அவர், அடுத்த பாய்ச்சலாக பாலிவுட்டில் கால் பதிக்கிறார். கார்த்திக் ஆர்யனுடன் 'நாக்ஸில்லா'வில் நடித்து வருகிறார். கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஒரு அமானுஷ்ய காமெடி திரைப்படம். ம்ரிக்தீப் சிங் லம்பா இயக்குகிறார்.
இந்த படம் ஆகஸ்ட் மாதமே வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால் சில பிரச்னைகளால் வௌிவரவில்லை. தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாம்பு தொடர்புடைய படம் என்பதால் ராட்சத பாம்பு தொடர்பான கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக அமையாததால் தற்போது அந்த பணிகள் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருதால் படம் காலதாமதமாகும் எனக் கூறப்படுகிறது.