உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தவறு பஹத் பாசில் மீது அல்ல : 'பேட்ரியாட்' இயக்குநர் விளக்கம்

தவறு பஹத் பாசில் மீது அல்ல : 'பேட்ரியாட்' இயக்குநர் விளக்கம்

சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், பஹத் பாசில் ஆகியோரின் நடிப்பில் மல்டி ஸ்டார் படமாக பேட்ரியாட் திரைப்படம் வெளியானது. இப்படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியிருந்தார். அரசாங்கத்திற்காக கண்டுபிடிக்கப்படும் ஒரு விஞ்ஞானத் தொழில்நுட்பத்தைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்த முயற்சிக்கும் ஓர் அமைச்சரையும், அவரது மகனின் தீய நோக்கத்தையும் முறியடிக்கும் ஒரு ராணுவ அதிகாரியாக மம்முட்டி நடித்திருந்தார். அந்தத் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார்.

ஆனால், படம் வெளியான பிறகு அதில் பஹத் பாசிலின் கதாபாத்திரமும் நடிப்பும் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்குத் திருப்திப்படுத்தவில்லை என பல ரசிகர்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.. படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன், அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையானதை பஹத் மிகவும் நேர்மையாகச் செய்துள்ளார். அவர் நடிப்பில் ஏதேனும் தவறு இருப்பதாக மக்கள் கருதினால், அது இயக்குனராக என்னுடையத் தவறாகத்தான் இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இப்படி ஒரு விமர்சனம் எழுந்ததற்குக் காரணம், சீனியர் நடிகர்களான மோகன்லால், மம்முட்டி இருவரும் படம் முழுவதும் காலில் இறக்கை கட்டிப் பறந்து கொண்டு சேசிங் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பிய நிலையில், பஹத் பாசில் பெரும்பாலான காட்சிகளில் ஒரு குளிரூட்டப்பட்ட அலுவலகத்திற்குள்ளேயே நின்று எல்லா உத்தரவுகளையும் பிறப்பிப்பது போல இருப்பதாலும் அவருக்கான அதிரடியான காட்சிகள் எதுவும் இல்லை என்பதாலும் தான் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை விமர்சனமாக வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !