உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளாவில் படப்பிடிப்பை நிறைவு செய்த அக்ஷய் குமார், வித்யா பாலன்

கேரளாவில் படப்பிடிப்பை நிறைவு செய்த அக்ஷய் குமார், வித்யா பாலன்


இது கோடைகாலம் என்பதாலோ என்னவோ சமீப நாட்களாக சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களின் படப்பிடிப்புகள் கேரளாவில் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், வித்யா பாலன் மற்றும் ராஷி கன்னா ஆகியோரின் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களுக்கு மேலாக கேரளாவில் நடைபெற்று வந்தது. அனீஸ் பாஸ்மி இந்த படத்தை இயக்குகிறார். ஏற்கனவே இவர் அக்ஷய் குமாரை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான். அது மட்டுமல்ல ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அக்ஷய் குமாருடன், வித்யா பாலன் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கேரள ஷெட்யூல் முடிவடைந்துள்ளதாக நடிகர் அக்ஷய் குமார் தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த படப்பிடிப்பு குறித்து அக்ஷய் குமார் கூறும்போது, “இவ்வளவு அழகான இடத்தில் இவ்வளவு திறமையான கலைஞர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. கேரளாவின் அன்பிற்கும் விருந்தோம்பலுக்கும் நன்றி விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கும்” என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !