உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி!

மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி!


கடந்த 2011ம் ஆண்டில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவந்த படம் 'ரௌத்திரம்'. இப்படம் கமர்ஷியல் ஆக சுமாரான வெற்றியைப் பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் குறித்து இன்றும் சிலாகித்து பேசி தான் வருகின்றனர். ரௌத்திரம் படத்தின் மூலம் அறிமுகமான கோகுல் அதன் பின்னர் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக கோகுல் படம் இயக்கும் முயற்சியில் உள்ளார். ஆனால், எதுவும் கைகூடவில்லை. இந்த நிலையில் 15 வருடங்களுக்கு பிறகு கோகுல், ஜீவா மீண்டும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். இது முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என்கிறார்கள். இதனால் இந்த படத்திற்கு 'டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ ராதை' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !