உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது?

'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது?


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், சிவராஜ் குமார்,மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜெயிலர் 2 படத்தை ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டு வரும் திட்டத்தில் இந்த படத்தில் இருந்து முதல் பாடல் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். மேலும், ஜெயிலர் முதல் பாகத்தில் தமன்னா நடனமாடிய 'காவாலா' பாடலை முதல் பாடல் ஆக வெளியிட்டது போல், ஜெயிலர் 2 படத்தில் நோரா பதேகி நடனமாடியுள்ள பாடல் முதல் பாடல் ஆக வெளியிட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !