ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா
நடிகை தமன்னா கடந்த பல வருடங்களுக்கு மேல் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த சில பாடல்களுக்கு கிளாமராக நடனமாடி கிரங்கடித்து வருகிறார்.
சமீபத்தில் தமன்னா அளித்த பேட்டியில் காதல் குறித்து கூறுகையில், ஒரு முறை மட்டும் இல்லை. பல முறை வருவது தான் காதல். இன்றைய காலகட்டத்தில் காதல் என்றால் என்ன, உறவு என்றால் என்ன என்பதில் பலர் குழப்பமடைகிறார்கள். காதல் ஒரு வியாபாரமாக மாறும் அபாயம் உள்ளது. ஒருவரை உண்மையாக நேசிக்க வேண்டுமெனில், அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். நம் எண்ணங்களை திணிப்பதன் மூலம் காதலை நிரூபிக்க முடியாது. காதல் என்பது ஒரே ஒரு அனுபவமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. அது வாழ்க்கையில் பலமுறை நிகழக்கூடிய உணர்வு. அந்த உணர்ச்சி வெளிப்புற காரணிகளால் இல்லை, நமக்குள் உருவாகிறது என தமன்னா தெரிவித்துள்ளார்.