உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பஹத் பாசில், பிரேம் குமார் பட படப்பிடிப்பு துவங்கியது

பஹத் பாசில், பிரேம் குமார் பட படப்பிடிப்பு துவங்கியது

தமிழில் 96, மெய்யழகன் போன்ற மென்மையான படங்களை இயக்கியவர் பிரேம் குமார். தற்போது ஒரு த்ரில்லர் கதையில் மலையாள நடிகர் பஹத் பாசிலை வைத்து வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் பிரேம் குமார் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் சிவதா, சேத்தன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க எமோஷனல், த்ரில்லர் ஜானரில் உருவாகிறது. முற்றிலும் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு மாறாக இருக்கும் என்கிறார்கள்.

இப்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு வாரம் அங்கு தான் படப்பிடிப்பு நடைபெறும். இதற்கு அடுத்தகட்ட படப்பிடிப்புகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் மொத்தம் 40-50 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்கிற திட்டத்தில் பிரேம் குமார் உள்ளார் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !