உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனது சுயசரிதை படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட சவுரவ் கங்குலி

தனது சுயசரிதை படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட சவுரவ் கங்குலி


கபில்தேவ், தோனி உள்ளிட்ட சில நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக கடந்த சில வருடங்களில் பாலிவுட்டில் வெளியானது. இந்த நிலையில் அடுத்ததாக 'பெங்கால் டைகர்' என அழைக்கப்படும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் சுயசரிதை தற்போது 'தாதா: எ ஸ்டோரி' என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில் கங்குலி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். ஏற்கனவே மும்பையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

மேலும் கங்குலியின் இளம் வயதுக் காட்சிகள் அவர் வசித்த பெஹாலா பகுதியில் உள்ள அவரது சொந்த வீட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது. தன்னுடைய சுயசரிதை படமாகிறது என்பதால் சவுரவ் கங்குலியும் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் படப்பிடிப்புக்கு அவ்வப்போது நேரில் வந்து படப்பிடிப்பைப் பார்வையிட்டதுடன், காட்சிகள் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக சில ஆலோசனைகளையும் அருகில் இருந்தே வழங்கி வருகிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !