உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆக., 21ல் 'மொத ராத்திரி' ரிலீஸ்

ஆக., 21ல் 'மொத ராத்திரி' ரிலீஸ்

சிறை, யூத் படங்களில் நடித்தவர் அனிஷ்மா. அடுத்தப்படியாக இவர் தமிழில் நடித்துள்ள படம் ‛மொத ராத்திரி'. ரிஷிகாந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ராஜா கருப்பசாமி இயக்கி உள்ளார். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இளம் காதல் ஜோடிகளை மையப்படுத்தி குடும்ப படமாக நகைச்சுவை கலந்து உருவாகி உள்ளது. தெலுங்கு சினிமாவை சேர்ந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதோடு ஆக., 21ல் படம் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !