பவிஷ் ஜோடியாகும் குஷ்பு மகள் அவந்திகா
இயக்குனர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அவந்திகா. மலையாளத்தில் 'ஆரம்பம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். தமிழில் 'டபுள் ஆக்குபன்சி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜினிமா மீடியா நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்க உள்ள 'அட்டாக்கர்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் நடிகர் தனுஷின் மருமகனும், 'நீக்' படத்தின் ஹீரோவுமான பவிஷ், நாயகனாக நடிக்கிறார்.
வாலிபால் விளையாட்டையும் அதனுடன் தொடர்புடைய கலாசார அடையாளத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க வாலிபாலை பிரதான கருவாகக் கொண்டு உருவாகும் முதல் திரைப்படம் என்ற சிறப்பை பெறுகிறது.
இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்காக அவந்திகா 6 மாதங்களுக்கு மேலாக தொழில்முறை வாலிபால் வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் படத்தின் முக்கிய அப்டேட்கள் வெளிவர உள்ளன.
அவந்திகாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காகத்தான் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோரை நேரில் சந்தித்து குஷ்பு - சுந்தர் சி தம்பதியினர் அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.