உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால்

'7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால்


கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் '7ஜி ரெயின்போ காலனி'. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.

கடந்த சில வருடங்களாக 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கி வருகிறார் செல்வராகவன். ரவி கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏற்கனவே இதன் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. தற்போது முதல் பாகத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்த சோனியா அகர்வால் இந்த பாகத்தில் ஒரு சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இதன் படப்பிடிப்பு இப்போது நிறைவு பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !