உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன்

பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன்

'மலையாள சிவாஜி' என்று அழைக்கப்பட்டவர் சத்யன். மலையாளத்தில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நாகர்கோவிலை சேர்ந்தவரான சத்யன் ராணுவத்தில் பணியாற்றினார். நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால் ராணுவத்தில் இருந்து விலகி சினிமாவிற்கு வந்தார். 'ஆத்மசகி' என்ற படத்தில் 1952ம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு நடித்த 'நீலக்குயில்' படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

தச்சோளி ஒதேனன் (1964), செம்மீன் (1965), யக்ஷி (1968), கடல்பாலம் (1969), மூலதானம் (1969), வாழ்வே மாயம் (1970), மற்றும் கரகானகடல் (1971) ஆகியவை அவர் நடித்த முக்கியமான படங்கள். இவை அனைத்துமே மத்திய மாநில விருதுகள் பெற்றவை. தமிழில் அவர் நடித்த முதல் தமிழ் படம் 'ஆளுக்கொரு வீடு'.

இதில் சத்யனுடன் டி.ஆர். ராமச்சந்திரன், எல்.விஜயலட்சுமி, டி.பாலசுப்ரமணியம், டி.எஸ்.முத்தையா, தாம்பரம் என்.லலிதா, எஸ்.டி. சுப்புலட்சுமி, பி.எஸ். வெங்கடாசலன், டி.ஆர். ராஜாமணி, சி.ஆர்.பாஸ்கரன், பி.சீதாலட்சுமி, ராஜேஸ்வரி பேபி மாலதி, மாஸ்டர் சி.ராஜா மற்றும் ஜாவர் என்.சீதாராமன் ஆகியோர் நடித்தனர்.

பிரபல நாடக ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான சக்தி கிருஷ்ணசாமியால் எழுதப்பட்டது, சுபாஷ் மூவிஸ் தயாரித்து, பிரபல மலையாள இயக்குனர் எம். கிருஷ்ணன் இயக்கியுள்ளார். விஸ்வநாதன்--ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர், இந்த படம் தவிர 1967ல் 'பேசும் தெய்வம்' என்ற படத்தில் நடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !