உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரதிராஜா மறைவு; முதல்வர், திரையுலகினர் அஞ்சலி

பாரதிராஜா மறைவு; முதல்வர், திரையுலகினர் அஞ்சலி

தமிழ் சினிமா மண் வாசனையுடன் கிராம கதைகளை நோக்கி நகர்ந்த பெருமை இயக்குனர் பாரதிராஜாவையே சேரும். 1941ல் தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்த பாரதிராஜா, '16 வயதினிலே' படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, அதன்பின், 'கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக்' என பல படங்களை மண் வாசனை கலந்தே எடுத்து முத்திரை பதித்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா, இன்று (ஜூன் 10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது உடல், சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு காலையில் முதல்வர் விஜய், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல்குமார், வன்னியரசு, திமுக முன்னாள் அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவுண்டமணி, சிவகுமார், சூர்யா, பார்த்திபன், சித்தார்த், சாந்தணு, தாமு, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, வையாபுரி, சூரி, சசிகுமார், விஜயகுமார், அருண் விஜய், ராமராஜன், சிவகார்த்திகேயன், விமல், ஜெய், ஸ்ரீகாந்த், பிரபு, ரவிமரியா,, இயக்குனர்கள் பாக்யராஜ், விக்ரமன், தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.சுந்தர்ராஜன், பேரரசு, ஷங்கர், சீனு ராமசாமி, தங்கர் பச்சான், சுசீந்திரன், மாரி செல்வராஜ், ஆர்கே செல்வமணி, சுதா கொங்கரா, கார்த்திக் சுப்பராஜ், மிஷ்கின், நடிகைகள் ராதிகா, நிரோஷா, பூர்ணிமா, கீர்த்தி சுரேஷ், ராதா, ரேகா, இசையமைப்பாளர் இளையராஜா, கங்கை அமரன், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பல திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !