உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குஷ்பு, சுந்தர் சி மருமகனுக்கு என்ன வேலை, திருமணம் எப்போது? எங்கே?

குஷ்பு, சுந்தர் சி மருமகனுக்கு என்ன வேலை, திருமணம் எப்போது? எங்கே?

நடிகை குஷ்பு, சுந்தர்.சி தம்பதியினரின் மூத்த மகள் அவந்திகாவுக்கும், ஷ்ரவன் சீனிவாசனுக்கும் திருமணம் நடக்க உள்ளது. மகள் திருமண பத்திரிகையை பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்டவர்களுக்கு நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார் குஷ்பு. இதெல்லாம் நடந்து பல நாட்கள் ஆகிவிட்டாலும், மாப்பிள்ளை ஷ்ரவன் யார்? அவர் என்ன வேலை செய்கிறார். திருமணம் எங்கே நடக்கிறது. எந்த நாளில் நடக்கிறது என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டுமே திருமண பத்திரிகையை குஷ்பு கொடுத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

திருமண தேதி, இடத்தை மீடியா உட்பட பலருக்கு சொல்லவில்லை. திருமணத்தை தனிப்பட்ட முறையில் சிறப்பாக நடத்த நினைக்கிறார்களாம். மாப்பிள்ளை ஷ்ரவன் மெர்ச்சண்ட் நேவியாக இருக்கிறார். இது காதல் கலந்த பெற்றோர்கள் ஆசியுடன் நடக்கும் திருமணம் என்று கூறப்படுகிறது.

மெர்ச்சண்ட் நேவி வேலை என்பது சர்வதேச அளவில் வணிகப் பொருட்களைக் கடல் வழியாக ஏற்றிச் செல்லும் கப்பல்களின் சேவை. இது நாட்டின் பாதுகாப்பிற்கான ராணுவப் படை அல்ல; மாறாக, உலகளாவிய வர்த்தகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சிவிலியன் துறை என்றும் கூறப்படுகிறது.

மணமகள் அவந்திகா மலையாளத்தில் ஆரம்பம், தமிழில் அட்டாக்கர் படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் திருமணம் சென்னை நட்சத்திர ஓட்டலில் ஜூன் 25ம் தேதி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் பிரதமர் கலந்துகொள்ள வாய்ப்பில்லை. பல ஆண்டுகளாக குஷ்புவின் நண்பராக இருக்கும் முதல்வர் விஜய் கலந்து கொள்வார். முதல்வராக அவர் கலந்து கொள்ளும் முதல் திருமண விழாவுக்கு குஷ்பு இல்லதிருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !