ராதிகா, லியோ சிவக்குமார் கூட்டணியில் ‛டெலிவரி பாய்' : டீசர் வெளியானது
தாய்கிழவி படத்திற்கு பின் ராதிகா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‛டெலிவரி பாய்'. இதில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் பிரகிடா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ சிவக்குமாரின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்த நானி, இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நானி.