‛குஸ்தி' கற்றால் தன்னம்பிக்கை வரும் : ஐஸ்வர்ய லட்சுமி
‛கட்டா குஸ்தி' படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி கூட்டணியில் வெளியாகி உள்ள படம் ‛கட்டா குஸ்தி 2'. செல்லா அய்யாவுவே இதையும் இயக்கி உள்ளார். கருணாஸ், கருணாகரன், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
படத்தை புரொமோஷன் செய்யும் விதமாக பல்வேறு ஊர்களில் படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். தஞ்சாவூருக்கு சென்ற படக்குழு அங்குள்ள ஒரு தியேட்டரில் மக்களுடன் படத்தை ரசித்தனர். இந்த நிகழ்வில் பேசிய ஐஸ்வர்ய லட்சுமி, ‛‛முதல்முறையாக இந்த ஊருக்கு வந்துள்ளேன். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் எப்போதாவது தான் கிடைக்கும். இந்த படத்தில் முக்கியத்துவம் மட்டுமல்ல கொண்டாடும் அளவுக்கு கிடைத்துள்ளது. இதுபோன்ற படம் ஆண்டுக்கு ஒன்று கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். குஸ்தி கற்றுக் கொண்டால் தன்னம்பிக்கை வரும், பாதுகாப்பு கிடைக்கும். விளையாட்டு மூலமே வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை எப்படி சரி செய்ய முடியும் என கற்றுக் கொள்ளலாம்'' என்றார்.