உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இதயம் முரளி படம் ரிலீஸானது

இதயம் முரளி படம் ரிலீஸானது

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் முதன்முறையாக இயக்கி உள்ள படம் ‛இதயம் முரளி'. அதர்வா முரளி, கயாடு லோஹர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அரசியல் பிரச்னைகளால் படம் தள்ளி போகுமா என கோலிவுட்டில் குழப்ப சூழ்நிலை நிலவியது.

தயாரிப்பாளர் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் முன்னாள் முதல்வர் குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் அவர் மீடியாவை சந்திக்கவில்லை. தவிர இந்த பட நிறுவனம் மீது பராசக்தி சம்பள பாக்கிக்காக இயக்குனர் சுதா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனாலும் அவர்கள் மீடியாவை சந்திக்கவில்லை. இதனால் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்தாமல், சில யுடியூப் சேனல்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டனர். இதனால் படம் பப்ளிசிட்டி இன்றி தவித்தது.

இந்நிலையில் கோர்ட் தடைகள் மீறி, அரசியல் பிரச்னைகளை கடந்து இதயம் முரளி படம் இன்று ரிலீஸ் ஆனது. ரெட் ஜெயண்ட் படத்தை ரிலீஸ் செய்கிறது. ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் பல ஆண்டுகள் தோல்வியால் துவண்டு இருக்கும் அதர்வா, அப்பா நடித்த தலைப்பு கொண்ட படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !