இந்தியா வந்தார் கிறிஸ்டோபர் நோலன்
ஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். 'பேட்மேன்: தி டார்க் நைட், இன்டர்ஸ்டெல்லார், மெமெண்டோ, டெனன்ட்' உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற படங்களை இயக்கியவர். இவர் இயக்கிற 'ஓப்பன் ஹெய்மர்' படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
தற்போது 'தி ஓடிசி' என்ற படத்தை இயக்கி உள்ளார். வரும் 17ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் காட்சிகள், பிரத்யேகமாக ஐமேக்ஸ் கேமரா மூலம் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல கவிஞர் ஹோமரின் 'தி ஒடிசி' என்ற கிரேக்க காவியத்தை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய முதல் சரித்திர படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஐமேக்ஸ் புக்கிங் தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் விற்றுவிட்டன.
இப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடலுக்காக கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவியும், தயாரிப்பாளருமான எம்மா தாமஸ், நடிகர் டாம் ஹாலண்ட் இந்தியாவுக்கு வந்துள்ளனர். சிறப்புக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொண்டனர்.
மும்பை திரையிடலுக்கு முன்னதாக அவர் பல ஓட்டல்கள், தேநீர் விடுதிகளுக்கு சென்று உணவருந்தினர். படம் தொடர்பான பல கலந்துரையாடல்களில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் அமெரிக்கா திரும்பினார்.