உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷாருக்கானின் கடலோர வீடு விரிவாக்க பணிகளுக்கு தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஷாருக்கானின் கடலோர வீடு விரிவாக்க பணிகளுக்கு தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானுக்கு மும்பை மன்னாட்டில் மிகப் பிரம்மாண்டமான வீடு உள்ளது. தற்போது அவர் இந்த வீட்டைச் சீரமைத்து மேலும் இரண்டு தளங்களைக் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக பாந்த்ரா பகுதியில் உள்ள புதிய அபார்ட்மெண்ட் ஒன்றிற்குத் தற்காலிகமாகக் குடிபெயர்ந்துள்ளார். கடந்த வருடம் இந்தப் பணிகள் தொடங்கிய நிலையில், ஷாருக்கான் வீட்டை விரிவாக்கம் செய்வதற்காக அளிக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை எதிர்த்து, மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தோஷ் தான்ட்கர் என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அங்கு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவின் நேர்மை மற்றும் அதன் அம்சம் குறித்துத் தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டு, பசுமைத் தீர்ப்பாயத்தின் முந்தைய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் ஷாருக்கானின் மன்னாட் வீட்டைப் புதுப்பிப்பதற்கான பணிகளில் ஏற்பட்டிருந்த தற்காலிகத் தடை விலகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !