‛வைல்டு லைப்' போட்டோகிராபராக நடிக்கும் சிவராஜ்குமார்
சென்னை பிறந்து வளர்ந்தவர் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார். இங்கேதான் கல்லுாரி படிப்பை முடித்தார். பின்னர், பெங்களூர் சென்றார். சென்னை வரும்போது தனது மலரும் நினைவுகளை உருக்கமாக பேசுவது அவர் ஸ்டைல். ஜெயிலர் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். ஜெயிலர் 2 படத்திலும் நடித்துள்ளார். ராம் சரணுடன் அவர் நடித்த பெத்தி தமிழகத்திலும் ரிலீஸ் ஆனது. அவர் கேரக்டருக்கு பாராட்டுகள் கிடைத்தன. இப்போது டூரிஸ்ட்பேமிலி அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் படம், இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கார்த்திக் ராஜூ இயக்கும் Welcome to wild life என்ற படத்தில் நடிக்கிறார். அவர் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழில் அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திருடன் போலீஸ், தெலுங்கில் சந்தீப்கிஷன் நடித்த நினு வீதனி நீ தானு நேனே சமீபத்தில் வெளியான சிங்கிள் ' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜூ. போஸ்டரில் சிவராஜ்குமார் இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில், இளமையான கெட்டப்பில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் கேமராவையும், மற்றொரு கையில் சிங்கக் குட்டியையும் ஏந்தியிருக்கிறார். வைல்டு லைப் போட்டோகிராபராக அவர் இந்த படத்தில் நடிக்கிறார். படம் தமிழிலும் வருகிறது.