பேஸ்புக்கில் எனக்கு கணக்கு இல்லை : பாவனா எச்சரிக்கை
ADDED : 1 days ago
சமூக ஊடகங்களில் பல நடிகைகள் பெயரில் கணக்குகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை போலியானவை என்பது அவ்வப்போது சில நடிகைகள் கொடுக்கும் எச்சரிக்கை மூலம் தெரியவருவது உண்டு. அந்த வகையில், நடிகை பாவனா தற்போது தனக்கு பேஸ்புக் தளத்தில் கணக்கு கிடையாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் தமக்கு இருப்பதாகக் கூறப்படும் அனைத்து பேஸ்புக் பக்கங்களும் போலி கணக்குகள், அவற்றை நம்ப வேண்டாம் என்றும் அவர் தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார்.
தனக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே அதிகாரப்பூர்வமான கணக்கு இருப்பதாகவும், அது ஒன்று மட்டுமே தனது சமூக வலைதளப் பக்கம் என்றும் கூறியுள்ளார் பாவனா. தன் பெயரில் இயங்கும் போலியான பேஸ்புக் கணக்குகள் ரசிகர்களைத் தவறாக வழிநடத்துவதை அறிந்த பின்னரே, இப்படி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.