உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜூன், பசில் ஜோசப் புதிய கூட்டணி ?

அல்லு அர்ஜூன், பசில் ஜோசப் புதிய கூட்டணி ?

மலையாளத் திரையுலகத்தின் முக்கிய இயக்குனரும், நடிகருமான பசில் ஜோசப் அடுத்து தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனை இயக்க உள்ளதாகத் தெரிகிறது.

அவருடைய சமூக வலைத்தளங்களில் 'ஐகான்' என்று பொறிக்கப்பட்ட தொப்பி ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜூன் தான் 'ஐகான் ஸ்டார்' என அழைக்கப்படுகிறார். இவர்களது படம் குறித்த பேச்சு வார்த்தை ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகிறது. தற்போது அது முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

அல்லு அர்ஜூன் தற்போது தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கத்தில் 'ராக்கா' படத்தில் நடித்து வருகிறார். அடுத்தும் தமிழ் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார். இப்படம் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இயக்குனர்களைத் தொடர்ந்து மலையாள இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளது தெலுங்குத் திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் எப்போது தெலுங்கு இயக்குனர்களின் படத்தில் அவர் நடிப்பார் என கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !