உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுசீந்திரன் இயக்கத்தில் விக்ராந்த், சாந்தனு!

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ராந்த், சாந்தனு!


இயக்குனர் சுசீந்திரன் 'வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா' உள்ளிட்ட படங்களை இயக்கி பெயர் பெற்றவர். ஆனால், சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த கடந்த 9 படங்கள் தொடர் தோல்வியை தழுவின.

தற்போது சுசீந்திரன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து கிடைத்த தகவலின் படி, சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சாந்தனு முதல்முறையாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக விக்ராந்த் நடிக்கவுள்ளார் என்கிறார்கள். விக்ராந்த் ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டிய நாடு, நெஞ்சில் துணிவிருந்தால் ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !