'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 2ம் பாகத்தில் ரியோ ராஜ்!
ADDED : 8 hours ago
'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' ஆகிய கலகலப்பான வெற்றி படங்களை தந்தவர் பொன்ராம். ஆனால், அதன் பின்னர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த 'சீமராஜா, எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி, கொம்பு சீவி' என தொடர் நான்கு தோல்வி படங்களாக அமைந்தது.
பொன்ராம் அடுத்து என்ன படம் பண்ண போகிறார் என விசாரித்தபோது கிடைத்த தகவலின்படி, பொன்ராம் இப்போது அவரது இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகத்தின் கதை எழுதும் பணியில் உள்ளார். இந்த பாகத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக முதன்மை கதாபாத்திரத்தில் ரியோ ராஜ் நடிக்கவுள்ளார். கூடுதலாக, இந்த படத்தை ரியோ ராஜ் புதிதாக தொடங்கியுள்ள ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார், என தகவல் தெரிவிக்கின்றனர்.