எடையை குறைக்க துபாய் பறந்த சிம்பு!
ADDED : 8 hours ago
தாணு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் 'அரசன்' படம் உருவாகி வருகிறது. வடசென்னை பின்புலத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், விக்ராந்த், ஆண்ட்ரியா என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.
இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. தற்போது அரசன் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சிறிய இடைவெளி விட்டுள்ளனர். இதனால் சிம்பு உடனடியாக துபாயில் உள்ள தனது புதிய வீட்டிற்கு பறந்துள்ளார். அவர் துபாய் பறந்ததற்கு பின்னனி காரணமாக அரசன் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக 5 கிலோ எடையை குறைக்கின்றார் என்கிறார்கள்.